பிரபாஸின் சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா? இணையத்தை கலக்கும் தகவல்!
‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. இதற்கு முன் இவர் இயக்கிய கே.ஜி.எப் படங்கள் சக்கைப்போடு போட்டதால், சலார் படமும் அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ், மலை போல் நம்பி உள்ள படம் சலார். ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் டிசம்பர் 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சலாரில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். பிரபாஸின் நண்பனான இவர் எப்படி வில்லனானார் என்பது படத்தின் மைய கதையாக இருக்கும் என்கிறார்கள். சமீபத்தில் சலாரின் ட்ரெய்லர் வெளியானது. கேஜிஎஃப் படத்தின் தங்கச்சுரங்க காட்சிகளை நினைவுப்படுத்தும்விதமாகவே இந்த ட்ரெய்லரின் காட்சிகளும், அதற்கு கொடுத்திருந்த வண்ணங்களும் அமைந்திருந்தன.
சலார் திரைப்படத்துக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய ‘ஏ’ சான்றிதழை சென்சார் வழங்கியுள்ளது. படத்தின் வன்முறை காட்சிகளை மனதிற்கொண்டு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால், குழந்தைகளை திரையரங்குகளுக்கு அழைத்துப் போய் ஏமாற வேண்டாம். சலார் திரைப்படம் 2 மணி 55 நிமிடங்கள் 22 நொடிகள் ஓடுவதாக சென்சாரில் குறிப்பிட்டுள்ளனர்.