எலெக்ட்ரிக் கார் வாங்க பிளானா? 2024ல் வெளியாகும் வாகனங்கள் இவை தான்!
காற்று மாசுபாடு நம் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருவதால், மாசற்ற சூழல்களுக்கு நாம் மாற விரும்புகிறோம். இதற்கு ஏற்ற வகையில் வாகன சந்தைகளும் மேம்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
இவர்களை திருப்திப்படுத்தும் விதமாக 2024 புத்தாண்டில் வரப்போகும் சிறந்த மின்சார கார்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை எவை என்றும் அவற்றின் சிறப்புகள் என்ன என்பதையும் விரிவாக காணலாம். இதில் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் நிறுவனமான மாருதி சுசூகி மின்சார கார்களும், உள்நாட்டின் தலைச்சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமான டாடா கார்களும், அண்டை நாட்டின் கியா கார்களும் அடங்கும்.
மாருதி சுசூகி eVX (Maruti Suzuki eVX) : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் இதுவாகும். 2024ஆம் ஆண்டில் eVX என்று பெயரிடப்பட்ட மின்சார காரை நிறுவனம் இந்திய சந்தைக்குக் கொண்டுவர உள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா உடன் இணைந்து இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் நீளம் 4.3 மீட்டர் ஆகவும், வீல்போஸ் 2.7 மீட்டர் ஆகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாருதி eVX காரில் இரட்டை டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமண்ட் கன்சோல், அடாஸ் (ADAS) அம்சங்கள், 360 டிகிரி கேமரா போன்ற பல சிறப்பம்சங்கள் அடங்கியிருக்கும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரை நம்மால் பயணம் மேற்கொள்ள முடியுமாம்!

பி.ஒய்.டி சீல் (BYD Seal) : BYD Atto 3 கார் அறிமுகம் செய்த கையோடு ‘சீல்’ என்ற காரை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. மேம்படுத்தப்பட்ட மின்சார வாகனமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ள நிறுவனம், 0-100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 விநாடிகளில் இந்த காரால் தொடமுடியும் என்று பி.ஒய்.டி தெரிவித்துள்ளது. மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் தூரம் வரை கார் ஓட்டிச் செல்ல முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
கியா இவி9 (Kia EV9) : கியா நிறுவனமும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் 2023 ஆட்டோ கண்காணிப்பு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட EV9 காரை அறிமுகம் செய்கிறது. 76.1 kWh பேட்டரி திறன் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹூண்டேய் கிரெட்டா இவி (Hyundai Creta EV) : பெட்ரோல், டீசல் வகை கார்களில் அதிகம் அபிமானம் பெற்ற கிரெட்டா காரின் மின்சார மாடலை ஹூண்டேய் நிறுவனம் விரைவில் சந்தைக்குக் கொண்டு வருகிறது. இது நேரடியாக மாருதி சுசூகி eVX, எம்ஜி ZS EV ஆகிய மின்சார கார்களுடன் சந்தையில் போட்டியிடும்.
டாடா ஹேரியர் இவி (Tata Harrier EV) : டாடா நெக்சான் இவி பேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்த நிறுவனம் தற்போது ஹேரியர் காரின் மின்சார பதிப்பை வெளியிட தயாராகி வருகிறது. இதன் தூரம் 500 கிலோமீட்டர் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.