இது தெரியுமா ? கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டால்.
என்னென்ன நோய்க்கு என்னென்ன உணவு:
- தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
- சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசியை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
- நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேனில் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
- வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
- வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
- ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.
- வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்தால் குணம் தெரியும்.
- புதினா விதையை வாயில் போட்டு மென்றால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் சில நாளில் குணமாகும்.
- வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
- ஒரு கிண்ணம் சாதம் வடித்த நீரில், கால் மேசைக் கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம், கருப்பட்டி இட்டு கஷாயம் செய்து பருகினால் அஜீரணம் சரியாகும்.
- தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும். இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் லேசான சுடுநீரில் அரை தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது.