ஓடிடி வருவதற்கு முன்பே பான் இந்தியா ஸ்டார்! – ஸ்ருதிஹாசன் பெருமை
சென்னை: இந்திய சினிமாவில், பான் இந்தியா என்ற வார்த்தை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. தென்னிந்திய முன்னணி ஹீரோக்களின் படங்கள், இந்தி ரசிகர்களையும் குறிவைத்து பான் இந்தியா முறையில் ரிலீசாகி வருகின்றன.
சில நடிகர், நடிகைகளும் தங்களை, பான் இந்தியா ஸ்டார் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் இதுபற்றி கேட்டபோது, ‘என்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. நான் அறிமுகமாகி வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே, அதாவது 11 வருடங்களுக்கு முன்பே, தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்திப் படங்களில் நடித்துவிட்டேன்.
சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பே நடித்துவிட்டேன். அப்போதைய என் பேட்டிகளை பார்த்தால் பான் இந்தியா என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பேன்’ என்று பெருமையாக கூறியுள்ளார்