இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான இராஜதந்திர தகராறுக்குப் பிறகு, மாலத்தீவு சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சையின் பின்னணியில், மாலத்தீவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால் மாலத்தீவில் வெளிநாட்டு சுற்றுலாவில் முன்பு முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி இந்தியா 2,09,198 சுற்றுலாப் பயணிகளுடன் முதலிடத்தில் இருந்தது

அதேபோல், மாலத்தீவில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பங்கு சுமார் 11 சதவீதமாக இருந்தது.

ஆனால், தற்போது இந்தியா ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஜனவரி 28, 2024க்குள், மாலத்தீவு சுற்றுலாவில் இந்தியாவின் பங்கு 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இம்மாதத்தில் வெறும் 13,989 பேர் மட்டுமே மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாலத்தீவிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடுகளில் 18,561 சுற்றுலாப் பயணிகளுடன் ரஷ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரஷ்யாவைத் தொடர்ந்து இத்தாலி (18,111), சீனா (16,529) மற்றும் பிரித்தானியா (14,588) உள்ளன.

மாலத்தீவு அரசாங்கத்தின் கூற்றுப்படி மாலத்தீவிற்கு சுற்றுலா செல்லும் டாப் 10 நாடுகள்:
1- ரஷ்யா: 18,561 சுற்றுலாப் பயணிகள் (10.6% சந்தைப் பங்கு, 2023 இல் 2வது இடம்)

2- இத்தாலி: 18,111 பேர் (10.4% சந்தைப் பங்கு, 2023 இல் 6வது)
3- சீனா: 16,529 பேர் (9.5% சந்தை பங்கு, 2023 இல் 3வது ரேங்க்)
4- பிரித்தானியா : 14,588 (8.4% சந்தைப் பங்கு, 2023 இல் 4வது)

5- இந்தியா: 13,989 பேர் (8.0% சந்தைப் பங்கு, 2023 இல் 1வது ரேங்க்)
6- ஜேர்மனி: 10,652 பேர் (6.1% சந்தைப் பங்கு)

7- அமெரிக்கா: 6,299 பேர் (3.6% சந்தைப் பங்கு, 2023 இல் 7வது ரேங்க்)

8- பிரான்ஸ்: 6,168 (3.5% சந்தைப் பங்கு, 2023 இல் 8வது)

9- போலந்து: 5,109 பேர் (2.9% சந்தைப் பங்கு, 2023 இல் 14வது)

10- சுவிட்சர்லாந்து: 3,330 பேர் (1.9% சந்தைப் பங்கு, 2023 இல் 10வது)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *