கூடைப்பந்து போட்டியில் சோகம்., மைதானத்தில் 14 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம்
பள்ளி மைதானத்தில் கூடைப்பந்து விளையாடிய 14 வயது சிறுமி சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Illinois மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் Momence High School மாணவி Amari Crite என்பவர் உயிரிழந்தார்.
விளையாட்டின் ஒரு பகுதியாக கூடைப்பந்து மைதானத்தின் முனைக்கு சென்ற சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
Crite-ன் மரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கண்காணிப்பாளர் Shannon Anderson வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பல குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று கூறினார்.