தேங்காய் சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை சேத்துக்கோங்க.. இன்னும் நல்லா இருக்கும்..

உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்வீர்களா? ஆனால் உங்கள் தேங்காய் சட்னி அவ்வளவு சுவையாக இருக்காதா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னியை செய்யும் போது, அதன் சுவையை அதிகரித்த அத்துடன் ஒருசில பொருட்களை சேர்த்து அரையுங்கள்.

இதனால் தேங்காய் சட்னி இன்னும் ருசியாகவும், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 இட்லியை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி என்ன பொருளை சேர்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, கொத்தமல்லியை தான் சேர்க்க வேண்டும். கொத்தமல்லியின் ப்ளேவர் சட்னிக்கு நல்ல சுவையைக் கொடுக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கொத்தமல்லி – 1 கப்
* தேங்காய் – 1 கப் (துருவியது)
* பச்சை மிளகாய் – 1
* இஞ்சி – 1 இன்ச் * பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – 1/2 கப்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் கொத்தமல்லியை நீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், சர்க்கரை, எலுமிச்சை சாறு, உப்பு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் சுவை பார்த்து, வேண்டுமானால், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கொத்தமல்லி தேங்காய் சட்னி தயார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *