புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த ராசிக்காரங்க வேலையில் கொஞ்சம் கவனமா இருக்கணும்… உங்க ராசி இதுல இருக்கா?
வேத ஜோதிடத்தில், புதன் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
புதன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் தெரியும். கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2024 பிப்ரவரி 01 ஆம் தேதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். புதனும், சனி பகவானும் நண்பர்கள் என்பதால், இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது மகரம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 3 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதி தான் புதன். இந்த பெயர்ச்சியின் போது புதன் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை செலவழிக்க நேரிடும். அதோடு மதிப்புமிக்க பொருட்களை இழப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இக்காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் போது உங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அலுவலகத்தில் அதிக மன உளைச்சலை சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இக்காலத்தில் சற்று மோசமான முடிவுகளைப் பெறலாம். புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க, கடக ராசிக்காரர்கள் தினமும் 11 முறை ஓம் சந்திராய நம என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான புதன், இப்பெயர்ச்சியின் போது 6 ஆவது வீட்டிற்குள் நுழைகிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.
சிலர் ஆரோக்கிய பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், வீட்டில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, சிம்ம ராசிக்காரர்கள் தினமும் விஷ்ணு பகவானை வழிபட்டு, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும்.