மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்து முதல் முறை மனம் திறந்த நடிகர் அசோக் செல்வன்..!!
ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .
மீடியம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படமா நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் நாயகன் காதல் மனைவி கீரதிபாண்டியன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.”ப்ளூ ஸ்டார் எனது 19வது படம். ஆனால், இதுவரை இப்படி ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. என் படத்தில் ஹீரோ அறிமுக காட்சிக்கு ரசிகர்கள் விசில் அடிப்பது இதுதான் முதல்முறை.
அடித்தட்டு மக்களையும் இணைப்பது மாதிரியான கதாபாத்திரத்தில் நான் இப்போதுதான் நடித்துள்ளேன் என்பதை உணர்ந்தேன்”ப்ளூ ஸ்டார் படப்பிடிப்பின்போது நானும், கீர்த்தியும் காதலர்களாக இருந்தோம், அதனால் Chemistry நன்றாக அமைந்தது. அப்பொழுது திருமணம் குறித்த பயம் எனக்கு இருந்தது.
நம்மால் முடியுமா என்றெல்லாம் தோன்றியது. ஆனால் கீர்த்திதான் எனக்கானவள் என்ற உணர்வு வந்த பிறகு, பயம் போய்விட்டது. திருமணம் செய்வதற்கான தைரியத்தை கொடுத்ததும் அவர்தான் என உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் அசோக் செல்வன்.