Sri Divya: சர்ச்சையால் வந்த வினை.. அது நடக்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன்.. சபதம் எடுத்த ஸ்ரீ திவ்யா?
சபதத்தை நிறைவேற்றி நடிகை ஸ்ரீ திவ்யா திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர், ஸ்ரீ திவ்யா. இந்த ஒரே படம் மூலமாக ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் தன் மீது திருப்பினார். படத்தில் இடம் பெற்ற, ‘ஊதா கலரு ரிப்பன்.. உனக்கு யாரு அப்பன்’ என்ற பாடல் வரவேற்பை பெற்றது. இந்த பாடலே ஸ்ரீ திவ்யாவை ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தது.
யார் இந்த நடிகை என பலரும் இவரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.
இந்த படத்தின் வெற்றி நடிகை ஸ்ரீ திவ்யாவுக்கு மேலும் பட வாய்ப்புகளை கொண்டு வந்தது. அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காக்கி சட்டை, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஜீவா , விஷால் ஜோடியாக மருது, விஷாலுக்கு ஜோடியாக ஜோதிகா , அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். இவரின் நடிப்பு ரசிக்கு படி இந்த படங்களில் அமைந்தது.
மிகக் குறுகிய காலத்தில் பல இளம் நடிகைகளுக்கு டப்பிங் பேசும் அளவுக்கு உயர்ந்த ஸ்ரீ திவ்யாவுக்கு ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்திற்குப் பிறகு 5 வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவர் நடிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் முக்கியமானது பிரபல நகைச்சுவை நடிகரின் இல்ல நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்.
அதாவது, தன்னுடன் பணிபுரிந்த நகைச்சுவை நடிகரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீ திவ்யா , குடித்துவிட்டு , அங்கேயே மயங்கி விழுந்து , அவரை மீண்டும் காரில் ஏற்றிவிட்டு, தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாராம். இந்த தகவலை அவர் உறுதி செய்யவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது பெயர் கெட்டுப்போனது மட்டுமின்றி அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. 5 வருடங்களுக்குப் பிறகு, விட்ட இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்து வரும் ஸ்ரீ திவ்யா, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘ரெய்டு’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் . இதையடுத்து அவர் நடித்துள்ள படம் ‘ நகர்புறம் ‘. இந்த படம் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.