HBD Amy Jackson: வாம்மா துரையம்மா.. நடிகை எமி ஜாக்சன் பிறந்த நாள் இன்று!
எமிஜாக்சன். பிரபலமான நடிகை மற்றும் ஆகச்சிறந்த மாடல். படுகவர்ச்சி உடையில் எல்லோருடைய மனசையும் அடித்து கொண்டு அள்ளி கொண்டு போகும் வித்தைக்காரர்.
அந்த மாயம் தெரிந்தவரின் பிறந்த நாள் இன்று. 1992 ல் ஜனவரி 31 ல் அமெரிக்காவில் பிறந்த இவர் இன்று அகிலம் முழுவதும் பிரபலம்.
டக்ளஸ் என்ற இடத்தில் மார்குட்டா , ஆலன் ஜாக்சன் ஆகியோர் மகளாக பிறந்த இவரின் முழு பெயர் எமி லூயிஸ் ஜாக்சன் ஆகும். பெரும் பகுதி லிவர்பூல் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கே உள்ள செயிண்ட் எட்வர்ட் கல்லூரியில் படித்தவர். ஆங்கில இலக்கிய புலமை பெற்றவர்.
இவர் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி நிறைய போட்டிகளில் பங்கேற்றார். சிறு வயதிலேயே மிஸ் லிவர்பூல், மிஸ் பிரிட்டன் ஆகிய இரு பட்டங்கள் வென்ற பிறகு மாடலிங் துறையில் மிகவும் பிரபலமானார். பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்களுடன் மாடலாக பணிபுரிய ஒப்பந்தமானார். சின்ன வயதிலேயே இந்த நிலைக்கு வர அழகும் வாளிப்பான உடல் தோற்றமும் அவரின் கவர்ச்சியும் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட 17 முறை அழகி பட்டங்கள் வென்றுள்ளார்.
மாடலிங் துறையில் இருந்தவரை அவருக்கு தொடர்பே இல்லாத தமிழ் திரைப்பட உலகம் தான் சினிமாவில் நடிக்க இழுத்து வந்தது. ஆர்யா நாயகன் ஆக நடித்த படம் “மதராசபட்டிணம்” . இந்தியா சுதந்திர போராட்ட களத்தில் உள்ள கதை. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ஆளுநர் மகள்தான் இந்த படத்தின் நாயகி. அந்த நாயகி தேடலில் இனையதளம் மூலம் கண்டறிந்து அழைத்து வரப்பட்டவர் தான் எமிஜாக்சன். கிராமத்தில் உள்ள இளைஞரை விரும்பி காதலிப்பவர். தமிழ் மொழி அறியாத இவர் மிகவும் அழகாக கதையின் வலிமை புரிந்து தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து இருப்பார்.
2010 ல் வெளியே வந்த இந்த படத்தில் தனது முதல் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். இந்த படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் ஏ. எல். விஜய் உடன் இரண்டாவது படத்தில் விக்ரம் உடன் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார்.
விக்ரம் உடன் “ஐ” தனுஷ் உடன் தங்க மகன் அட்லி இயக்கத்தில் விஜய் உடன் “தெறி” உதயநிதி உடன் “கெத்து” ரஜினியின் எந்திரன் 2.0 தேவி என்று தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து சற்றே இடைவெளி விட்டு சமீபத்தில் பொங்கல் வெளியீடாக மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் மிஷன் சாப்டர் 1 என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.