10 Years of Rummy : கூட மேல கூட வச்சு.. விஜய் சேதுபதி நடிப்பில் விறுவிறுப்பான காதல் கதை.. 10 ஆண்டுகளை கடந்த ரம்மி!
2014 ஜனவரி 31 ல் வெளிவந்த திரைப்படம் ரம்மி. விஜய் சேதுபதி, காயத்ரி, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை கே.பாலகிருஷ்ணன் இயக்கினார்.
மேலும் பீட்சா படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் விஜய் சேதுபதி , இனிகோ பிரபாகர் , ஐஸ்வர்யா ராஜேஷ் , காயத்ரி சங்கர் , சூரி மற்றும் ஜோ மல்லூரி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜா முகமது படத்தொகுப்பிலும், பிரேம்குமார் சந்திரனின் ஒளிப்பதிவிலும் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.
இக்கதை புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களான சக்தி மற்றும் ஜோசப் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலிப்பதைச் சுற்றி கதை நகர்கிறது. இனிகோ பிரபாகர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லூரிக்குப் படிக்க வருகிறார். அவருக்குக் உடன் படிக்கும் பூலாங்குறிச்சி காயத்ரிடன் காதல். இனிக்கோவின் தோழன் விஜய் சேதுபதி மற்றும் சூரி. பக்கத்து ஊரைச் சேர்ந்த சையத் காயத்ரிக்காகவே அதே கல்லூரியில் சேர்கிறார்.
ஒரு கட்டத்தில் இனிக்கோ சக்திக்கும், சையத்துக்கும் மோதல் வெடிக்கிறது. ரவுடிகளைக் கூட்டிப் போய் கல்லூரி விடுதியில் சண்டை போடுகிறார். அதனால் கல்லூரி நிர்வாகம் சையத்தைக் கல்லூரியை விட்டு நீக்குகிறது. சக்தியையும் ஜோசப்பையும் கல்லூரி விடுதியை விட்டு மட்டும் நீக்குகிறது.
அவர்கள் பூலாங்குறிச்சி கிராமத்தில் சூரி உதவியுடன் வீடு எடுத்துத் தங்குகிறார்கள். ஜோசப்புக்கும், ஜஸ்வர்யா என்கிற உள்ளூர்ப் பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஊர்ப் பெரியவருக்கு தன் தம்பி மகளான காயத்ரியின் காதல் விவகாரம் தெரிகிறது. இனிகோ தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த சமயம் ஐஸ்வர்யாவிற்குக் திருமண ஏற்பாடுகள் நடக்க, விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யாவும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.
ஐஸ்வர்யா ஊர் பெரியவரின் மகள் என்பது அப்போது தான் தெரிய வருகிறது. பெரியவரின் ஆட்கள் ஜோசப்பைக் கொன்று ஐஸ்வர்யாவை அழைத்து வருகிறார்கள். பெரியவர் ஐஸ்வர்யாவையும் கொல்லத் துணிகிறார். இதையெல்லாம் காயத்திரி கேட்டுவிடுகிறார். தனக்கும் இனிகோவிற்கும் இந்த நிலைதான் நடக்கும் எனப் பரிதவிக்கிறார். ஆனால் அவர்கள் காயத்திரியைப் பார்த்துவிடுகிறார்கள்.