பெட்ரூமில் மறைந்திருக்கும் தவளையை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்!

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும் போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும் போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொள்கிறது.

இதன் மூலம் ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பெட்ரூம் ஒன்றிருக்கிறது. அதில் ஒரு பெண், கரடி பொம்மையை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருக்கிறார். தரையில் ஒரு பொம்மை விழுந்துகிடக்கிறது. அதேப்போல் ஜன்னலோரத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றில் பொம்மை உள்ளது. ஆனால் இந்த அறைக்குள் ஒரு தவளை உங்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டுள்ளது. அதைதான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கிழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள்.

6 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

பெரியவர்களும் சிறியவர்களும் விளையாடும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல பொம்மைகள் உள்ள இந்த அறையில், மறைந்திருக்கும் தவளை எங்கிருக்கிறது என கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு பொருளையும் கவனமாக பாருங்கள். இன்னும் தெரியவில்லையா? சரி, வேண்டுமானால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். படுக்கையின் பின்பகுதியில் மாட்டப்பட்டுள்ள ஓவியத்தை சற்று கூர்மையாக பார்த்தால் உங்களால் ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும்.

இதோ நீங்கள் எளிதில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக பச்சை நிறத்தில் இருக்கும் தவளையை வட்டமிட்டு காட்டியுள்ளோம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் 6 நொடியில் கண்டுபிடித்திருந்தால், உங்கள் பார்வைத்திறன் அபாரமாக இருப்பதாக அர்த்தம். பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன.

நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. சில குறிப்பிட்ட கலவைகளில் நிறம், வெளிச்சம், வடிவம் ஆகியவை நிறைந்திருப்பதால், படத்தில் இல்லாதது இருப்பது போலவும் இருப்பது இல்லாதது போலவும் நமக்கு தெரிகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *