அசத்தும் அழகில் அஜித் மகள்; அனோஷ்காவின் க்யூட் போட்டோவை வெளியிட்ட ஷாலினி
நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது மகள் அனோஷ்காவின் க்யூட் போட்டை ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் அஜித்- ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினி-அஜித் இருவரிடையே காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்
இந்தநிலையில், நடிகை ஷாலினி தனது மகள் அனோஷ்காவின் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‘மை பேபி’ என்கிற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள, இந்த புகைப்படத்தில் ஷாலினி தனது மகள் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல் உள்ளது. இதுவரை நாம் பார்த்திராத அந்த கியூட்டான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
அஜித் மகள் அனோஷ்கா தற்போது 16 வயதை எட்டிய டீன் ஏஜ் பெண்ணாக இருக்கிறார். இந்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி அஜித் தனது மகளின் பிறந்தநாளை, துபாயில் கப்பலில் கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.