அமெரிக்கா இதை செய்யாவிட்டாலும்.,ஐரோப்பா இதை நிச்சயம் செய்ய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி பேசியது என்ன?
உக்ரைனுக்கு பக்கபலமாக ஐரோப்பிய யூனியன் துணை நிற்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா போரானது 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையிலும், போர் நிறுத்தம் தொடர்பான எத்தகைய முன்னெடுப்புகளும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், நோட்டோவில் அடுத்த உறுப்பு நாடாக இணையும் என நம்பப்படுகிற ஸ்வீடனில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து முக்கிய கருத்தை வெளிப்படுத்தினார்.
அதில் உக்ரைனை பாதுகாக்க ஐரோப்பிய யூனியன் துணிவான முடிவை எடுக்க வேண்டும், அமெரிக்க அதன் இராணுவ உதவியை குறைத்தாலும் முழுமையாக நிறுத்தினாலும் சரி என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது ஐரோப்பாவிற்கு தீர்க்கமான மற்றும் சோதனையான காலம், உக்ரைனை பாதுகாக்க உறுதியாக நாம் தயாராக இருக்க வேண்டும், அவை என்ன விலை கொடுத்தாலும் சரி, அமெரிக்கா என்ன முடிவு எடுத்தாலும் சரி என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா நண்பராக கிடைத்தற்கு ஐரோப்பா அதிர்ஷ்டசாலியாக இருந்தது, இருப்பினும் நாம் தெளிவாக இருக்க வேண்டும், உக்ரைன் ஐரோப்பிய பிராந்தியத்தின் ஒரு அங்கம், எனவே அமெரிக்க என்ன முடிவு எடுத்தாலும் உக்ரைன் மற்றும் உக்ரைன் மக்களை பாதுகாக்க துணிச்சலான முடிவை ஐரோப்பா எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய பிரதேசத்தை உள்ளடக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பின் எதிர்காலத்தை இனி அமெரிக்கா மற்றும் ரஷ்யா தீர்மானிக்க முடியாது, தனது எதிர்காலத்தை ஐரோப்பாவே தீர்மானிக்கும் உரிமையை கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யர்களின் வெற்றி என்பது நம்முடைய குறுகிய மற்றும் நீண்டகால விலை என்றும், அது நமது அனைவருக்கும் மிகவும் அதிகமான விலை என்றும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.