பிரித்தானியாவில் கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம்மில் குண்டு வைத்த நபர்கள்: அடுத்து நடந்த பயங்கரம்
இங்கிலாந்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் ஒன்றில் குண்டு வைத்து கொள்ளையடிக்க முயன்றி செய்ய, அந்த குண்டு அவர்கள் முகத்திலேயே வெடித்துச் சிதறும் காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கமெராவில் சிக்கிய காட்சி
இங்கிலாந்திலுள்ள Northwood என்னுமிடத்தில், ஏடிஎம் ஒன்றில் கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள் கொள்ளையர்கள் இருவர்.
ஏடிஎம் இயந்திரத்தில் சிறு வெடிகுண்டு ஒன்றைப் பொருத்தி, அது வெடித்ததும், கிடைத்த பணத்தை அள்ளிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் கொள்ளையர்கள் சிலர் தொடர்ந்து இங்கிலாந்தில் கைவரிசை காட்டிவந்துள்ளனர்.
அப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஏடிஎம் ஒன்றில் அவர்கள் கொள்ளையடிப்பதற்காக குண்டு வைக்கும்போது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்துச் சிதற, கொள்ளையர்களில் ஒருவர் முகத்திலேயே அந்த குண்டு தாக்கியுள்ளது.
ஆனாலும், 93,000 பவுண்டுகளை தூக்கிக்கொண்டுதான் அங்கிருந்து ஓடியிருக்கிறார்கள் அந்தக் கொள்ளையர்கள். இந்தக் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
38 ஆண்டுகள் சிறை
சில வாரங்களுக்குப் பிறகு, கொள்ளையடித்த பணத்துடன், எகிப்து, மெக்சிகோ என உலகம் சுற்றலாம் என்ற ஆசையுடன் மான்செஸ்டர் விமான நிலையத்துக்குச் சென்ற கொள்ளையர்களை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கார்களைத் திருடி, அலுவலகங்களுக்குள் நுழைந்து, ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஏடிஎம் இயந்திரத்தில் குண்டு வைத்து திருடி, அந்தப் பணத்தில் ஜாலியாக உலக சுற்றும் கொள்ளையர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என, நேற்று எக்ஸில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.