சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு ஏடிஎம் கொள்ளை… ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
சமீபத்தில்தான் சுவிட்சர்லாந்தில் பணம் கொண்டு செல்லும் வேனை மடக்கிக் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு பிரான்சில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் கொள்ளையர்கள்.
சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு ஏடிஎம் கொள்ளை…
சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் கொள்ளைகள் அதிகரித்துவருகின்றன. திங்கட்கிழமையன்று, ஜெனீவாவிலுள்ள Meyrin என்னுமிடத்தில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்றுவிட்டார்கள் கொள்ளையர்கள்.
ஏடிஎம் இயந்திரத்தைக் காருடன் இணைத்து, காரை வேகமாக இயக்க, ஏடிஎம் இயந்திரம் தரையிலிருந்து பெயர்த்துக்கொண்டு வந்துள்ளது.
இயந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, காரை தீவைத்துக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்கள் கொள்ளையர்கள். இதுவரை அவர்கள் பொலிசாரிடம் சிக்கவில்லை.