வேலூரில் “வேர்” விட்ட தாமரை.. பாஜக அண்ணாமலை சொன்னதை செஞ்சிடுவார் போல.. மோடி வேற வர்றாரு.. திமுக ரெடி
சென்னை: பிப்ரவரி 2வது வாரத்தில், மறுபடியும் பிரதமர் மோடி சென்னை வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சில காரணங்களும் யூகங்களாக வலம்வர துவங்கியிருக்கின்றன.
பிரம்மாண்டமான, அதேசமயம் வலுவாக உள்ள தேசிய கட்சிதான் பாஜக.. வடமாநிலங்களில் பெருத்த செல்வாக்குடன் வலம்வரும் இந்த கட்சி, கடந்த 2 வருடங்களில் நடந்த சில தேர்தல்களில் சறுக்கல்களை தழுவி வருகிறது..
ஆம் ஆத்மி: சில இடங்களில் முட்டிமோதி “ஜஸ்ட் பாஸ்” வெற்றியை பெற்று வருகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸின் சுறுசுறுப்பும், ஆம் ஆத்மியின் எழுச்சியும்தான். இந்த 2 கட்சிகளும், பாஜகவை முந்திக்கொண்டு மேலெழுந்து கொண்டிருக்கின்றன..
இதன்காரணமாக, தங்களுடைய கோட்டை என்று கருதக்கூடிய வலுவான மாநிலங்களையே, பாஜக ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. அதனால்தான், வடமாநிலங்களில் கோட்டை விட்டதை, தென்மாநிலங்களில் எட்டிப்பிடித்துவிட, பாஜக முயன்று வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும் வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்தி, வரும் தேர்தலில் குறைந்தது 10 “தாமரைகளையாவது” டெல்லிக்கு அனுப்பிவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வருகிறது.
அழுத்தமான பார்வை: இதற்காக தமிழகத்தின் மீது மேலிட தலைவர்களின் பார்வை அழுத்தமாகவே விழுந்து வருகிறது. ஆனால், கூட்டணி இன்னும் அமையவில்லை.. எந்த கட்சியும் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எப்படியும் பாஜக தலைமையிலேயே 3வது அணி அமையக்கூடும் என்று சொல்கிறார்கள்.
அதற்கேற்றவாறு, அதிமுக அமைதியாகவே இருக்கிறது.. இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை.. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள்கூட, தங்கள் ஆதரவை தரவில்லை.
இதையெல்லாம்தான், பாஜக தனக்கு சாதகமாக்க முயன்று கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, திமுக அரசின் ஒவ்வொரு அசைவையும் விமர்சித்து, தங்களுக்கான முக்கியத்துவத்தை பதிய வைத்து வருகிறது.. மேலும், தங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கே தேர்தல் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார் அண்ணாமலை.
பாஜக: அதுமட்டுமல்ல, அதிமுகவை விட ஒரு தொகுதி கூடுதலாக ஜெயித்தாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதை நிரூபிக்கவே பாஜக இப்படியான “காய்களை” நகர்த்தி வருகிறது. இந்த இலக்கை அடைவதற்காகவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து போவதாக தெரிகிறது.