அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தென் கொரியாவில் விபத்து
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தென் கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் விபத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி எவ்வித சிக்கலும் இன்றி மீட்கப்பட்டுள்தாக கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கை
இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகியபோது விமானத்தின் விமானி, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தென் கொரிய மீட்புக் குழு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிஙறது.
அமெரிக்க விமானப்படை தென் கொரியாவின் மேற்கு கடற்கரையில் இரண்டு தளங்களைப் கொண்டுள்ளது.
இதன்படி கடந்த டிசம்பரில், இதுபோன்ற F-16 ரக விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.