இதுதான் சரவெடி.. கட்டிட கள ஆய்வு நடந்ததா? தமிழக பத்திரப்பதிவு போட்ட போடு.. பரபரத்த சார் பதிவாளர்கள்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பதிவுத்துறை பல்வேறு சலுகைகளையும், நடவடிக்கைகளையும், அறிவித்து வரும்நிலையில், இப்போதும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு துறையில் இப்போது எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது.. அந்தவகையில், பதிவுத்துறையிலும் ஆன்லைன் வழியாகவே பதிவு செய்யப்படுகிறது. ஒரு இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் நேரம் மிச்சமாகிறது.. பொதுமக்களுக்கும் வேலை எளிதாக முடிகிறது. இடைத்தரகர்களும் இங்கு நுழைய வேண்டிய தேவையில்லை.
அதேபோல, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்வதற்கான, “தட்கல்” திட்டம், சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு உட்பட எத்தனையோ வசதிகளை பதிவுத்துறை செய்து வருகிறது.
பதிவுத்துறை: ஆனாலும், ஒருசில புகார்கள் எழுந்தபடியே உள்ளது.. குறிப்பாக, சில அலுவலகங்களில் எதிர்பார்த்த அளவுக்கு, சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு நடப்பதில்லை என்ற புகார் வெடிக்கவும், இதற்கு உடனடியாக பதிவுத்துறை கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேபோல, சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சார் – பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்படும் பத்திரங்களை, ஓரிரு நாட்களுக்குள்ளேயே உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்.. இப்படி பணி முடித்து திருப்பி தரப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கையை, பதிவாளர்கள் கண்காணிக்கவும், கட்டிட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்றும் பதிவுத்துறை உத்தரவிட்டிருந்தது.
கள ஆய்வுகள்: ஆனால், சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு புகார் வெடித்தது.. “சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில், பதிவு முடிந்து விட்டது, பத்திரத்தை நேரில் வந்து வாங்கி கொள்ளுங்கள்” என்று வாட்ஸ்அப் மெசேஜ்கள் வருகின்றனவாம்.. இதை நம்பி சம்பந்தப்பட்டவர்கள், நேரில் சென்றால், கட்டிட கள ஆய்வு இன்னும் முடியவில்லை என்கிறார்களாம்.
அதனால், கள ஆய்வு முழுமையாக இருந்தால் மட்டுமே, தகவல் தர வேண்டும் என்றும், சார் – பதிவாளர்கள் வேண்டுமென்றே மக்களை அலைக்கழிக்கக்கூடாது, இது தொடர்பான நடவடிக்கையை பத்திரப்பதிவு துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் கிளம்பின..
பதிவுத்துறை: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு புகார் முளைத்துள்ளது.. அதாவது, பதிவுத்துறையில் பெரும்பாலான சார் பதிவாளர்கள், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடத்தை கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பதிவான பத்திரத்தை தர தாமதம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளன.. இதையறிந்த பதிவுத்துறை, இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.