சனத் நிஷாந்தவின் விபத்தில் சிக்கிய மூன்றாவது வாகனம் : சாரதியின் வாக்குமூலத்தில் தொடரும் சிக்கல்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்துக்குள்ளான இரு வாகனங்களின் சாரதிகளும் மூன்றாவது வாகனத்தை குறிப்பிட்டுள்ளதால், நெடுஞ்சாலைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேகம், மோசமான தெரு விளக்குகள், கவனக்குறைவு மற்றும் மூன்றாவது வாகனம் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகன சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்
மேலும், இந்த விபத்தின் போது வாகனம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதாகவும், அமைச்சர் விரைவில் வீட்டுக்குச் செல்ல விரும்பியதாகவும் வாகன சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்போது இடதுபுறம் வந்த மற்றைய காரை முந்திச்செல்ல முற்பட்ட போது, ​​தனக்கு முன்னால் பயணித்த பாரவுர்தியை கண்டதாகவும், ஆனால் பயம் காரணமாக வாகனத்தை வீதியின் வலது பக்கம் கொண்டு வர முடியாமல் போனமையினால் இந்த விபத்து நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாகன சாரதியின் வாக்குமூலங்களில் சிக்கல்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி
குறித்த சாரதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சாரதியின் கைத்தொலைபேசி இரகசிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,நெடுஞ்சாலையில் உள்ள பாதுகாப்பு கேமரா அமைப்பும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *