விப்ரோ-வில் திடீர் பணிநீக்கம்.. ஓட்டுமொத்த ஐடி ஊழியர்களும் ஷாக்..!!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு அதிரடியான நடவடிக்கைகளை அடுத்த சில நாட்களில் எடுக்கும் எனக் கணித்தது போலவே இந்நிறுவன ஊழியர்களைப் பயமுறுத்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
விப்ரோ நிர்வாகம் தனது மார்ஜின் அளவுகளை மேம்படுத்த முயற்சி செய்யும் காரணத்தால் ஆன்சைட்டில் பணியாற்றும் மிட்-லெவல் பதவிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முயற்சி உள்ளதாகவும், இதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முதல் இன்று வரையில் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களும் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தாலும், இதுவரையில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஒரு ஐடி ஊழியரைக் கூடப் பணிநீக்கம் செய்யவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக விப்ரோவின் பணிநீக்க நடவடிக்கை குறித்த செய்தி இந்திய ஐடி ஊழியர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களில் விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் மிகவும் குறைவாக உள்ளதால் முதலீட்டாளர்கள் தொடர்வது பங்குகளை விற்பனை செய்யும் முடிவுக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
டிசிஎஸ் 25 சதவீத மார்ஜின் அளவுடன் இருக்கும் வேளையில் இன்போசிஸ் 20.5 சதவீதமும், ஹெச்சிஎல் 19.8 சதவீதத்துடன் உள்ளது. ஆனால் விப்ரோ வெறும் 16 சதவீத மார்ஜின் அளவை பதிவு செய்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் ஆன்சைட்டில் இகுக்கும் மிட்-லெவல் ஊழியர்களில் பலருக்கு பணிநீக்க அறிவிப்புகள் குறித்த ஈமெயில் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. விப்ரோ, CAPCO ஆன்சைட் வர்த்தகத்தில் அதிகளவிலான சம்பளம் பெறும் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர், இப்பிரிவில் இருந்து வருமானம், வளர்ச்சி ஆகியவை வந்தாலும் போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் அளவை உயர்த்தும் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ள இந்நிறுவன தலைமை நிதியியல் அதிகாரி அபர்னா இந்தப் பணிநீக்க திட்டத்தா நிர்வாகத்திடம் முன்வைத்து, தற்போது மிட்-லெவல் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. விப்ரோ 2021 ஆம் ஆண்டுக் கன்சல்டிங் நிறுவனமான CAPCO-வை சுமார் 1.45 பில்லியன் டாலருக்கு வாங்கியது, இது விப்ரோ தியரி டெலாபோர்டே தலைமையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவாகும். கொரோனா தொற்றுக்குப் பின்பு ஏற்பட்ட வர்த்தகச் சரிவால் இந்த முடிவு பெரும் ஓட்டையை விப்ரோ மார்ஜினில் ஏற்படுத்தியுள்ளது.