குட் நியூஸ்..! மொபைல் போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு..!
ஆப்பிள் உள்ளிட்ட உலகின் பல முன்னணி செல்போன்கள் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. அவற்றை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் ஸ்க்ரூக்கள், சிம் சாக்கெட் போன்ற உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்திருக்கிறது மத்திய அரசு.இதனால் செல் போன்களின் விலை குறையும்.