பட்ஜெட்-க்கு முன் வந்த குட்நியூஸ்.. டீசல் மீது புதிய வரி ஒத்திவைப்பு..!
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) பயோடீசல் கலப்படம் செய்யப்படாத டீசல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதல் வரி விதிக்கும் காலக்கெடுவை இன்னும் ஓராண்டுக்கு அதாவது ஏப்ரல் 1, 2025க்கு ஒத்திவைத்துள்ளது.
எத்தனால் மற்றும் பயோ டீசலுடன் கலக்காத பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு முறையை 2023 ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.
இதன் மூலம் டீசல் விலை உயர்வுக்குத் தற்காலிக விடுமுறை கிடைத்துள்ளது. இந்தியாவில் பியோ எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் கச்சா இறக்குமதியைக் குறைப்பதற்கும், இதன் மூலம் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என்ற முக்கியத் திட்டத்துடன் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்தது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% வெளிநாட்டு இறக்குமதி மூலம் பூர்த்திச் செய்கிறது. இதை மேலும் குறைக்கவும், உள்நாட்டு ஆதாரங்களை அதிகளவில் பயன்படுத்தவும் கருப்பு, சோளம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால்-ஐ கலந்து விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, எத்தனால் கலப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிரீன் ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10% முதல் 67% வரை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. பட்ஜெட் 2024 கூட்டத்தொடர் இன்று துவக்கம்.. 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.24,300 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது, இதேபோல் 509 கோடி லிட்டர் பெட்ரோலை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) சேமித்துள்ளன என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி ஜனவரி மாத துவக்கத்தில் தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கனவே 20 சதவீத கலப்பு எரிபொருளை விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இதைப் பகுதி பகுதியாகவே செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதால் இந்தியா முழுவதும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. 2024-25க்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலையும், 2029-30க்குள் 30 சதவீத அளவீட்டை அடைவதை மத்திய அரசு முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படத் துவங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 9300 பெட்ரோல் பங்க்-களில் E20 எரிபொருள் எனப்படும் 20% கலப்பு எரிபொருளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2025ல் நாடு முழுவதும் E20 பெட்ரோல் விற்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி புதன்கிழமை தெரிவித்தார்.