ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், 3 வருடத்தில் 3.5 லட்சம் கிடைத்திருக்கும்..!!

ங்குச் சந்தை முதலீடுகள் என வரும் போது பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெரு நிறுவனங்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
ஆனால் சிறு நிறுவனங்களில் தான் குறுகிய காலத்தில் பெரிய வளத்தை பெற முடியும். அதற்கு உதாரணமாக பல ஸ்மால் கேப் பங்குகள் சந்தையில் உள்ளன. அப்படி ஒரு ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு மூன்றே ஆண்டுகளில் வெறும் ரூ.21இல் இருந்து ரூ.716 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதில் முதலீடு செய்வதர்கள் எல்லாம் இப்போது உற்சாகத்தில் இருக்கின்றனர்.
டயர்களை மறுசுழற்சி செய்து அசுர வளர்ச்சி: தேவையில்லை என கழிவுகளில் வீசப்படும் டயர்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனம் தான் டின்னா ரப்பர் & உள்கட்டமைப்பு(Tinna rubber & infrastructure limited) நிறுவனம். இந்தியா மட்டுமில்லாமல் ஓமன், நெதர்லாந்து நாடுகளிலும் ஆலைகளை நிறுவி பழைய டயர்களை மறு சுழற்சி அதன் மூலம் புதிய தயாரிப்புகளை வழங்குகிறது. கழிவில் வீசப்படும் டயர்கள்/எண்ட் ஆஃப் லைஃப் டயர்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுகின்றனர். 3 ஆண்டுகளில் 3,556% லாபம்: பங்குச்சந்தையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்கு ரூ.21ஆக இருந்தது.
இதுவே 2024, ஜனவரி 30ஆம் தேதி ரூ.718 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3,556% உயர்வு கண்டிருக்கிறது. ஒரு ஆண்டிலேயே ரூ.518 உயர்வு: டின்னா ரப்பர்& உள்கட்டமைப்பு (Tinna rubber & infrastructure limited) நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ரூ.518 உயர்வு கண்டுள்ளது. இது 265.64% லாபம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25.63% மற்றும் ஒரு நாளில் (ஜனவரி 30) 19.33% என அடுத்தடுத்து உச்சம் தொட்டு கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பங்குக்கு ரூ.9 வீதம் டிவிடெண்டும் தந்திருக்கிறது.
இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். உதாரணத்திற்கு கடந்த 2021ஆம் ஆண்டு இதில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் தற்போது அது மூன்றரை லட்சத்தை கடந்து சென்றிருக்கும். நிறுவனத்தின் வளர்ச்சி: டின்னா ரப்பர்& உள்கட்டமைப்பு (Tinna rubber & infrastructure limited) நிறுவனத்தின் சந்தை மூலம் ரூ.1,026 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வருவாயை பொறுத்தவரை 2019ஆம் ஆண்டு ரூ.132 கோடியாக இருந்தது, அதுவே 2023 இறுதியில் ரூ.302 கோடியாக உயர்ந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *