அதிர்ச்சி! 34 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி காரை வாங்க ஆள் இல்ல! இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறப்பவே இப்படியா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டிற்கான மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 2,01,301 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டில் 2,17,317 ஆக இருந்தது. இது 7 சதவீத வீழ்ச்சி ஆகும்.
வேகன் ஆர் காரின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில் இது அனைத்து விதங்களிலும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யக்கூடிய ஒரு தயாரிப்பு ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் நல்ல மைலேஜ் வழங்க கூடியது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்/ஏஜிஎஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
மறுபக்கம் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.54 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 7.38 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். சிறப்பான மைலேஜ் மற்றும் ஓரளவிற்கு குறைவான விலை என்ற போதிலும், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை சரிவடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.