எழுதி வெச்சிக்கோங்க… கியாவுக்கு சவாலாக இருக்க போகிற புது ஹூண்டாய் கார் இதுதான்! டர்போ என்ஜின் உடன் தயாராகுது
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் (Hyundai Creta N Line) காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும் என ஒரு படம் இணையத்தில் பரவி வருகிறது. அந்த படத்தில் உள்ள காரின் தோற்றத்தை பற்றியும், இந்த புதிய கிரெட்டா கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் ஹூண்டாய் கார்களுள் ஒன்றாக கிரெட்டாவை சொல்லலாம். 4 மீட்டர்களுக்கும் அதிகமான நீளத்தை கொண்ட இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் சமீபத்தில்தான் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் மற்றொரு புதிய கிரெட்டா காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
அதுதான், கிரெட்டா என் லைன் கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ஐ20 என் லைன் மற்றும் வென்யூ என் லைன் உள்ளிட்ட என் லைன் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் விரைவில் கிரெட்டா என் லைன் காரையும் இணைக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், கிரெட்டா என் லைன் காரை வைத்து விளம்பர வீடியோக்களை படமாக்கும் வேலைகளில் கூட ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது, புதிய கிரெட்டா என் லைன் காரின் புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இது ஓர் காப்புரிமை படம் ஆகும். அதாவது, புதிய கிரெட்டா என் லைன் காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும் என இந்த கார் டிசைனுக்கு ஹூண்டாய் நிறுவனம் பெற்றுக்கொண்ட காப்புரிமைக்கான படம் இதுவென கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் பார்க்கும்போது, வழக்கமான கிரெட்டா காரை காட்டிலும் புதிய கிரெட்டா என் லைன் கார் தோற்றத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது.
பொதுவாகவே, வழக்கமான ஹூண்டாய் கார்கள் உடன் ஒப்பிடுகையில், என் லைன் கார்கள் செயல்படுதிறனில் மேம்பட்டதாக இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதேபோல், தோற்றத்திலும் கிரெட்டா என் லைன் கார் புதுமையானதாக இருக்கும் என்பதை தற்போது கிடைத்துள்ள படத்தின் மூலம் அறிய முடிகிறது. காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்ஸ் மற்றும் டிஆர்எல் டிசைனில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், முன்பக்க கிரில்லின் டிசைன் சிறிதளவு மாற்றப்பட்டு உள்ளது. அதாவது, கிரில் பகுதியின் உயரம் குறைக்கப்பட்டு, அகலம் அதிகமாக்கப்பட்டு உள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இத்தகைய கிரில் சிஸ்டத்தை ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் காண முடியும். அதேபோல், முன்பக்க பம்பரும் அகலமான ஏர் இன்லெட் உடன் சற்று வித்தியாசமான வடிவில் உள்ளது.
பம்பரை சுற்றிலும் வழங்கப்படும் அவுட்லைன்ஸ் ஃபாக்ஸ் பிரஷ்டு அலுமினியத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டதாக உள்ளது. காரின் சைடு ஸ்கிர்ட்ஸ் கொஞ்சம் ஆல்டர்னேஷன் செய்யப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றையும் விட, படத்தில் காரின் சக்கரங்களின் அளவு பெரியதாக உள்ளதை காண முடிகிறது. ஆதலால், இது 18-இன்ச் அலாய் சக்கரங்களாக இருக்கலாம். அதுவே, வழக்கமான கிரெட்டா வேரியண்ட்களில் 16 அல்லது 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.