3 ஆண்டுகளில் 490% லாபம் தந்த குஜராத் நிறுவனம் – Osia hyper retail
நம்பிக்கை, இது தான் பங்குச்சந்தை முதலீடுகளுக்கு அடிப்படை. இதெல்லாம் பேச நல்லா தான் இருக்கும் என நீங்கள் கூறலாம்.
ஆனால் சரியான கணக்கீடும், சரியான தேர்வும், பொறுமையும் இருந்தால் உங்கள் முதலீடு பல மடங்கு உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு நிறுவனம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் நாம் வாங்கி போடும் பங்கு பின்னாளில் நல்ல வளர்ச்சி அடைந்து நமக்கு லாபத்தை அளிக்கின்றன.
இப்படி முதலீட்டாளர் வைக்கும் நம்பிக்கைக்கு பரிசாக நிறுவனங்கள் அளிப்பவை தான் டிவிடெண்ட், போனஸ் பங்குகளை வழங்குவது, பங்குகளை பிரிப்பது, பங்குகளை திரும்ப வாங்குவது போன்றவை. அப்படி தங்களை நம்பிய முதலீட்டாளர்களுக்கு 490% லாபம் தந்திருக்கிறது குஜராத்தை சேர்ந்த ரீடெய்ல் நிறுவனம். ஓசியா ஹைபர் ரீடெய்ல்: Osia Hyper Retail – ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனம், குஜராத்தில் 40க்கும் அதிகமான இடங்களில் மிகப்பெரிய கடைகளை வைத்து நடத்தி வருகிறது. மளிகை சாமான்கள், காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் என இங்கு கிடைக்காத பொருட்களே கிடையாது. நம் வீட்டிற்கு தேவையான அனைத்துமே இங்கே கிடைக்கும். இந்த ரீடெய்ல் ஸ்டோர்கள் குஜராத்தில் அசுர வளர்ச்சியை கண்டு வருகின்றன. 2019இல் வெளியிடப்பட்ட ஐபிஓ: ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனம் முதன்முதலாக கடந்த 2019 மார்ச் 26இல் ஐபிஓ அறிவித்தது. அப்போது NSEயில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ₹252 என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு லாட்டில் 400 பங்குகள் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு லாட்டின் விலை 400*252 = ரூ.1,00,800 ஆகும். பின்னர் ஏப்ரல் 5இல் தேசிய பங்குச்சந்தையில் லிஸ்டான போது ₹255 என இருந்தது. நிறுவனம் அறிவித்ததை விட ஒரு பங்கின் விலை 3 ரூபாய் மட்டுமே உயர்ந்திருந்தது.
முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும், நீண்ட கால முதலீடாக வைத்திருந்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட். போனஸ் மற்றும் பங்கு பிரிப்பில் ஜாக்பாட்: சிறிது காலத்திற்கு பின் ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனம் 3:5 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. அதாவது முதலில் 400 பங்குகள் கொண்ட ஒரு லாட்டினை வாங்கி இருந்தவர்களுக்கு பங்குகளின் எண்ணிக்கை 640 என உயர்ந்தது.