ஜாம்பவான் சச்சின் மாற்று யுவ்ராஜ் சிங்கின் சாதனையை தகர்ந்த 12 வயது இளம்வீரர் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய முக்கிய இடமாக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பை போட்டிகளானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ரஞ்சி கோப்பை தொடரின் நான்காவது சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் சில அரிதான நிகழ்வுகளும் இந்த சீசனில் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் தற்போது ரஞ்சி கோப்பையில் 12 வயதில் ஒரு இளம் வீரர் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அறிமுகமாகியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு இந்த விடயம் தற்போது ஒரு சாதனையாகவும் மாறியுள்ளது.

அந்த வகையில் பீகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி என்கிற 12 வயது வீரர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் அறிமுகமாக விளையாடியது தற்போது டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் சாதனையாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரது சாதனையை வைபவ் சூரியவன்ஷி தகர்த்துள்ளார்.

அதாவது இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பாக யுவ்ராஜ் சிங் தனது பதினைந்தாவது வயது 57-வது நாளில் ரஞ்சி கோப்பை போட்டியில் அறிமுகமாகி விளையாடியிருந்தார். அதேபோன்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பதினைந்தாவது வயது 203 நாட்களில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் இவர்கள் இருவரது சாதனையும் தகர்த்துள்ள வைபவ் சூரியவன்ஷி தற்போது 12 வயதில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் அறிமுகமாகி உள்ளார்அவரது. அவரது இந்த சாதனையை இனிவரும் வீரர்கள் தகர்ப்பது அரிதிலும் அரிதான விடயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *