மருமகனுக்கு எதிரான நிற்கும் மாமனார்.. இந்திய அணியை பார்த்து கத்துக்கோங்க.. கொந்தளித்த ஷாகித் அப்ரிடி
கராச்சி : பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக அவரது மாமனாரான ஷாகித் அப்ரிடி காட்டமாக விமர்சித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் இரண்டிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் இயக்குநராக முகமது ஷஃபீல் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணி கேப்டனாக ஷான் மசூத் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஷாகித் அப்ரிடி இருவரும் நியமனம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் இரண்டிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஷாகித் அப்ரிடி மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஒற்றை கேப்டனை 3 வடிவங்களுக்கும் சேர்த்து நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசுகையில், பாகிஸ்தான் அணிக்கு ஒரே கேப்டனை நியமிக்க வேண்டும். அதேபோல் துணை கேப்டன் என்ற பதவியே தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்படி துணை கேப்டனை நியமனம் செய்யவில்லை என்றாலே, கேப்டனாக இருப்பவர் கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பார்.