காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்க மாட்டேன்.. மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி முடிவு.. மம்தா பானர்ஜி விளக்கம்.!!!
மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி முடிவு குறித்து மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத காங்கிரசுக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க முன் வந்தேன்.
மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளிலும் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள், காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்க மாட்டேன். கூடுதல் தொகுதிகள் கேட்டால் ஒரு சீட் கூட தர மாட்டேன்.
மேலும் மார்க்சிஸ்ட் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் 2 சீட் தருவேன். எங்கள் முடிவில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் இல்லாமல் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மம்தா பானர்ஜி கூறியதாவது, தேர்தல் நேரம் என்று வந்தால் மட்டும் சிலருக்கு சிலிர்க்க ஆரம்பித்துவிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம். பாஜகவை வீழ்த்தும் வலிமையுள்ள கட்சி உள்ளது என்றால் அது திரிணாமுல் காங்கிரஸ் தான். பாஜக உடனான சண்டை தொடரும். பாஜகவுக்கு எதிராக தனித்தே போராடுகிறோம் என்று தெரிவித்திருந்தார்.