2023 அதிக படங்கள் : மலையாளத்தில் முதலிடத்தில் குஞ்சாக்கோ போபன்.. 2ம் இடத்தில் மம்முட்டி

2023ல் மலையாள திரை உலகில் இதுவரை 234 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த வருடம் 5 படங்களில் நடித்து அதிக படங்களில் நடித்தவர் என்கிற சாதனையை செய்துள்ளார்.

இந்த ஐந்து படங்களில் கடந்த மே மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனா 2018 படமும் ஒன்று. அதில் நான்கைந்து ஹீரோக்களுடன் இணைந்து இவர் நடித்திருந்தாலும் அந்த படம் இவரது நூறாவது படமாக அமைந்து வெற்றி படமாகவும் மாறியதில் குஞ்சாக்கோ போபனுக்கு இந்த வருடம் மகிழ்ச்சியான ஆண்டாகவே அமைந்துவிட்டது.இதற்கு அடுத்ததாக நடிகர் மம்முட்டி நான்கு படங்களில் நடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்த வருட துவக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து வெளியான கிறிஸ்டோபர் படம் கைகொடுக்காவிட்டாலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான கண்ணூர் ஸ்குவாட் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மலையாளத்தில் மம்முட்டிக்கு ஒரு தீரன் அதிகாரம் ஒன்று என்று சொல்லும் அளவிற்கு அந்த படம் அமைந்துவிட்டது. அடுத்ததாக வெளியான காதல் தி கோர் படமும் விமர்சன ரீதியாகவும் மம்முட்டியின் துணிச்சலான நடிப்புக்கு பெரிய வரவேற்பையும் பெற்று தந்தது.நடிகர் மோகன்லால் இந்த வருடம் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் தமிழில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜெயிலர் படமும் ஒன்று. இந்த வருட துவக்கத்தில் புலிமுருகன் இயக்குனர் வைசாக்குடன் மீண்டும் இணைந்து நடித்த அலோன் திரைப்படம் தோல்வியை தழுவியது.

அதே சமயம் இந்த வருட இறுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த நேர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்து மோகன்லாலுக்கு இந்த வருடத்தை சந்தோசமாக நிறைவு செய்து வைத்துள்ளது.இவர்கள் தவிர பஹத் பாசில், டொவினோ தாமஸ், நிவின்பாலி ஆகியோர் தலா மூன்று படங்களில் நடித்துள்ளனர். துல்கர் சல்மான், பிரித்விராஜ் இருவரும் ஆளுக்கொரு படங்களில் மட்டுமே நடித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *