அமெரிக்காவில் இருந்தபடியே H-1B Renewal: இந்தியர்களுக்கும் கனேடியர்களுக்கும் முதல் வாய்ப்பு

வேலைக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு இனி விசா புதுப்பித்தல் விஷயத்தில் சிரமப்பட வேண்டியதில்லை.

எச்-1பி விசா புதுப்பித்தல் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்த அமெரிக்கா எடுத்த முடிவு அமுலுக்கு வந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இம்மாதம் 29ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள், அமெரிக்காவில் இருந்தபடியே தங்களின் காலாவதியான விசாக்களை இப்போது புதுப்பிக்க முடியும்.

பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் 20,000 விசாக்கள் புதுப்பிக்கப்படும்.

முதல் கட்ட ஓட்டத்தில் இந்தியர்கள் மற்றும் கனேடியர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஐந்து வார விசா புதுப்பித்தல் திட்டத்தில், அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் வாரத்திற்கு 4,000 விசாக்களை புதுப்பிப்பார்கள்.

பிப்ரவரி 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரை மிஷன் இந்தியா வழங்கிய விசாக்கள் மட்டுமே புதுப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

United States kicks off domestic H-1B visa renewals, United States H-1B visa renewal Application, India and Canada, US H-1B visa, H-1B visa renewal without leaving US

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *