பிரான்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள புதிய பிரதமர்
பிரான்சில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள புதிய பிரதமர்
பிரான்சில் விவசாயிகள் கூடுதல் ஊதியம், குறைந்த கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான பொருட்களின் விலை குறைப்பு முதலான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பிரான்சின் புதிய பிரதமரான கேப்ரியல் அட்டால்.
விவசாயம் நமக்கு பலம், பெருமை, அது நமக்கு உணவளிப்பதால் மட்டுமல்ல, அது நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் அஸ்திவாரங்களில் ஒன்றாக விளங்குகிறது என்று நாடாளுமன்ற உரையின்போது குறிப்பிட்டுள்ளார் அவர்.
நாம் விவசாயிகளுக்கு செவிகொடுக்கவேண்டும், உழைக்கும் அவர்கள், தங்கள் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரத்தைக் குறித்து கவலையில் உள்ளார்கள் என்று அவர் கூறியுள்ள நிலையில், பிரான்ஸ் அரசு விவசாயம் தொடர்பான புதிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் நாட்களில் வெளியிட உள்ளது.