ஹவுதிகளை எதிர்கொள்வதற்காக புறப்படும் பிரித்தானியாவின் பிரம்மாண்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்
செங்கடலில் அட்டூழியம் செய்துவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதற்காக, பிரித்தானியாவின் பிரம்மாண்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் ஒன்று செங்கடலுக்குப் புறப்படத் தயாராகிவருகிறது.
இரண்டு போர்க்கப்பல்கள்
பிரித்தானியாவின் இரண்டு பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், HMS Queen Elizabeth மற்றும் HMS Prince of Wales என பெயரிடப்பட்ட போர்க்கப்பல்கள் ஆகும்.
இவற்றில் ஒன்று, செங்கடலில் அட்டூழியம் செய்துவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதற்காக, செங்கடலுக்கு புறப்பட உள்ளது.
எப்போது புறப்படும்?
உண்மையில், இப்போது செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலான USS Dwight D Eisenhower என்னும் கப்பல் நின்றுகொண்டுள்ளது. ஆனால், போர்க்கபல்கள் அப்படியே நீண்டகாலமாக நடுக்கடலிலேயே நிற்க முடியாது. அவையும் துறைமுகத்துக்கு திரும்பவேண்டிய நேரம் வரும்.
ஆக, Eisenhower எப்போது அமெரிக்காவுக்குத் திரும்புகிறதோ, அப்போது, அதன் இடத்தை நிரப்ப, பிரித்தானிய போர்க்கப்பல் ஒன்று புறப்படும்.
ஆனால், அது எப்போது என்பது இப்போதைக்குத் தெரியாது. ஆக, எப்போது வேண்டுமானாலும் புறப்படுவதற்கு தயாராக பிரித்தானியாவின் பிரம்மாண்ட விமானந்தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்று காத்திருக்கிறது.
இந்த தகவலை, பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சரான James Heappey தெரிவித்துள்ளார்.