லோக்சபா தேர்தல்: தென்னிந்தியாவில் 132 தொகுதிகளில் பாஜக அணிக்கு வெறும் 30 சீட்தான்
லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் உள்ள மொத்தம் 132 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தமே 30 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது ABP-CVoter கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ABP-CVoter கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் விவரம்:
கிழக்கு இந்தியா (பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம் – மொத்தம் 153 தொகுதிகள்):
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 80 – 90 இடங்கள் (42% வாக்குகள்)
இந்தியா கூட்டணி – 50 – 60 இடங்கள் (38% வாக்குகள்)
இதர கட்சிகள் 10 -20 இடங்கள் ( 20% வாக்குகள்)
வட இந்தியா (ஹரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம்- மொத்தம் 180 தொகுதிகள்):
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 150 – 160 இடங்கள் (50% வாக்குகள்)
இந்தியா கூட்டணி 20 – 30 இடங்கள் (36% வாக்குகள்)
இதர கட்சிகள் 0 – 5 இடங்கள் ( 14% வாக்குகள்)
தென் இந்தியா (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா- மொத்தம் 132 தொகுதிகள்):
இந்தியா கூட்டணி 70 – 80 இடங்கள் (40% வாக்குகள்)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 – 30 இடங்கள் (19% வாக்குகள்)
இதர கட்சிகள் 25 – 35 இடங்கள் ( 41% வாக்குகள்)
மேற்கு இந்தியா (குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மொத்தம் 78 தொகுதிகள்):
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 45 – 55 இடங்கள் (46% வாக்குகள்)
இந்தியா கூட்டணி 25 – 35 இடங்கள் (37% வாக்குகள்)
இதர கட்சிகள் 0 -5 இடங்கள் ( 17% வாக்குகள்)
இந்திய அளவில் மொத்தமாக
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 – 335 இடங்கள் (42% வாக்குகள்)
இந்தியா கூட்டணி 165- 205 இடங்கள் (38% வாக்குகள்)
இதர கட்சிகள் 35 -65 இடங்கள் ( 20 % வாக்குகள்)