உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க..ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவு
சுலோவாக்கியா ஜனாதிபதி ஸுசனா கேபுடோவாவை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
சுலோவாகியா ஜனாதிபதி
கனடா பயணத்தின் ஒரு பகுதியாக சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதி ஸுசனா கேபுடோவா (Zuzana Caputova) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது துணை பிரதமரும், நிதி அமைச்சருமான Chrystia Freeland மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயரும் உடனிருந்தனர்.
சுலோவாகியாவில் உள்ள கனடாவின் இராஜதந்திர அலுவலகத்தை குடியுரிமைத் தூதருடன் முழு தூதரகமாக மாற்றியதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர் என கனடாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ட்ரூடோவின் பதிவு
மேலும், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை அவர்கள் வரவேற்றனர், இது கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) முடிவில் இருந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஸுசனா கேபுடோவா உடனான சந்திப்பு குறித்து ட்ரூடோ வெளியிட்ட பதிவில்,
”ஜனாதிபதி ஸுசனா கேபுடோவா: நமது நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மைக்கு, நமது மக்களுக்கு இடையேயான நட்புக்காக மற்றும் கனேடியர்கள், சுலோவாகியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நம் அர்பணிப்புக்கு, நேற்றைய அருமையான சந்திப்பிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.