பிரித்தானியாவில் இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை! 7,374 கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் தீர்ப்பு

அவுஸ்திரேலியாவுக்கு 700 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு, பிரித்தானியாவில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்திய வம்சாவளி
பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதி 59 வயதான ஆர்த்தி தீர் (Arti Dhir), 35 வயதான கவல்ஜித்சிங்ஹ் ராய்ஜடா (Kavaljitsinh Raijada).

இந்திய வம்சாவளியான இவர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டில் இந்த தம்பதியின் தத்து மகன் கோபால் செஜானி (11) கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவனை காப்பாற்ற சென்ற ஹர்சுக் கர்தனி என்ற உறவினரும் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட தீர், ரைஜாடா தம்பதி ஆயுள் தண்டனை என்பது அவர்களின் மனித உரிமைகளை மீறும் என்று பிரித்தானிய நீதிமன்றங்களை நம்ப வைத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பினர்.

பின்னர் 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 700 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயின் ஏற்றுமதி செய்ததற்கான வழக்கில் இந்த தம்பதி சிக்கியது.

‘Breaking Bad’ தொடர் பாணியில் இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய போதைப்பொருட்களின் மதிப்பு 888 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 7,374 கோடி) ஆகும்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அதிகாரிகள் போதைப்பொருளை இடைமறித்து, பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகாமைக்கு (NCA) எச்சரித்தபோது தம்பதியரின் சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

514 கிலோகிராம் கோகோயின்
அடுத்தடுத்த NCA விசாரணையில், இந்த தம்பதி அவுஸ்திரேலிய சந்தையில் 57 பவுண்டுகள் மில்லியன் மதிப்புள்ள 514 கிலோகிராம் கோகோயின் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் Viefly Freight Services என்ற முன்னணி நிறுவனத்தைப் பயன்படுத்தி, உலகளவில் வணிக ரீதியாக மருந்துகளை அனுப்பும் அதிநவீன நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி தீர், கவல்ஜித் தம்பதிக்கு பிரித்தானியாவில் தலா 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *