Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 01, 2024 – வியாழக்கிழமை
மேஷம்:
இன்று உங்களின் உள்ளுணர்வு சொல்லும் விஷயங்களை அப்படியே பின்பற்றி நடங்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவும் ஆற்றல் இன்று உங்களுக்குள் பிறக்கும். உங்கள் துணையின் மீதான பாசம் அதிகரிக்கும் இதயம் உறவு மேலும் வலுவடையும். உங்கள் விடாமுயற்சி சிக்கல்களை சமாளிக்க உங்களுக்கு உதவும். எதிர்பாராத விதமாக ஏற்கனவே திட்டமிட்ட பயணங்களை இன்று ஒத்திவைக்க நேரிடும்.
ரிஷபம்:
உறவுகள் சிறப்பாக இருக்க இன்று வீட்டில் அமைதியான சூழல் நிலவ நீங்கள் முயற்சி எடுங்கள்.உங்களைச் சுற்றியுள்ள அழகை ரசிக்க இன்று சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பீர்கள். உங்களது பொறுமை இன்று சோதிக்கப்படலாம், ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும். உங்கள் திறன்களை நம்பினால் தான் எதிர்கால லட்சியங்களை நிறைவேற்ற முடியும்.
மிதுனம்:
உறவுகளுக்குள் அமைதி நிலவ ஒன்றாக நேரம் செலவிட முக்கியத்துவம் கொடுங்கள். உங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்த இன்று வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிப்பதில் இன்று சில சிரமங்களை சந்திக்கலாம். உங்களின் எதிர்கால இலக்குகள் மீது உரிய கவனம் செலுத்தினால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
உங்கள் காதல் வாழ்வில் இன்று நீங்கள் முக்கிய முடிவை எடுக்க வேண்டி இருக்கலாம். உணர்ச்சி ரீதியான பிணைப்புகள் அதிகரிக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இன்று உங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். புதிய அனுபவங்களை உருவாக்குவதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
சிம்மம்:
காதல் உறவில் இருப்பவர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இதனை தக்க வைக்க விட்டுக்கொடுத்து போவதில் கவனம் செலுத்துங்கள். உங்களை சுற்றி நேர்மறை விஷயங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். உங்களது வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடங்கல்கள் வரலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவும் வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம்.
கன்னி:
உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இன்று நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். நேர்மையை கடைபிடிப்பது உங்களது நாளை உற்சாகமாக வைக்க உதவும். வாழ்க்கை துணையுடன் செலவழிக்கும் நேரத்தை அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் சிறப்பானதாக்கி கொள்ளுங்கள். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
துலாம்:
எதிலும் சமநிலையைப் பேணுவதே இன்றைய உங்கள் வெற்றிக்கு தாரக மந்திரமாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் சச்சரவுகளில் சிக்காமல் இருக்க சமாதானமாக செல்ல வேண்டும். வேலையில் ஏதேனும் சிரமங்கள் இருந்தாலும், உங்கள் ராஜதந்திரம் அணுகுமுறை அவற்றை சமாளிக்க உங்களுக்கு உதவும். உங்கள் எதிர்கால இலக்குகள் நோக்கி இன்று செயல்பட ஏற்ற நாள்.
விருச்சிகம்:
உறவுகளுக்குள்பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் உங்கள் உள்ளத்தில் இருக்கும் உணர்ச்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்துங்கள். உங்களது மனஉறுதி இன்றைய சவால்களை வெற்றிகரமாக சந்திக்க உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். பயணங்களை திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளி வைத்து உங்கள் ஓய்விற்கு முன்னுரிமை கொடுங்கள்.
தனுசு:
உங்கள் சாகச உணர்வு இன்று உங்களை வழிநடத்தும். உங்கள் படைப்பு ஆளுமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை நீங்கேளே உருவாக்கி கொள்வதில் கவனம் செலுத்துங்கள். ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிப்பதில் சில சவால்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் நேர்மறை மற்றும் சுறுசுறுப்பு அவற்றை முறியடிக்க உங்களுக்கு உதவும்.
மகரம்:
உங்கள் அன்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு உங்கள் காதல் உறவுகளை மேம்படுத்தும். உங்கள் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு இன்று முன்னுரிமை கொடுங்கள். பணியிடத்தில் உங்கள் மீது சக ஊழியர்கள் பொறாமை கொள்ளலாம். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள மறக்காதீர்கள்.
கும்பம்:
புதிய உறவை தேடுபவர்கள் தங்கள் தனித்தன்மையை மதிக்கும் துணையைத் தேடுவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களது திறமை இன்று வெளிப்படும், வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் தனித்துவம் காரணமாக செல்வாக்கை பெறுவீர்கள். புதுமையான கருத்துக்களை ஆராயவும் உங்கள் அறிவை ஆழப்படுத்தவும் கண்டறிய இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மீனம்:
உங்கள் உள்ளுணர்வு சொல்வதற்கு கேட்டு அதன்படி இன்று நடங்கள். உங்கள் உறவில் உணர்ச்சிபூர்வமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களது புகழை அதிகரிக்க செய்யும் வாய்ப்பு கிடைக்க கூடும். பணியிடத்தில் உற்சாகமான சூழல் நிலவும். உங்களது தொடர் முயற்சி நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும்.