மாத சம்பளத்துக்கு ஆப்பு வைக்கப்போகும் 2024… இந்த நிறுவன ஊழியர்களுக்கு வேலை சிக்கல்தான்… வெளியான தகவல்!

கடந்த சில வாரங்களாக, Alphabet, Amazon, Citigroup, Ebay, Macy’s, Microsoft, Shell, Sports Illustrated மற்றும் Wayfair ஆகிய நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை அறிவித்திருந்தன.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யுனைடெட் பார்சல் சர்வீஸ், நேற்று 12,000 ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதோடு வாரத்தில் ஐந்து நாட்கள் தொழிலாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரம் மோசமான சமிக்ஞைகளை அனுப்புவதால் பணிநீக்கங்கள் வருகின்றன என்று சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் விளக்கம் அளிக்கின்றன. ஒருபுறம், அமெரிக்க வேலை வாய்ப்புகள் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து, மீண்டும் ஒரு பொருளாதார சாஃப்ட் லேண்டிங் பற்றிய பேச்சை தூண்டியுள்ளது. அமெரிக்க நுகர்வோர் உணர்வின் முக்கிய அளவுகோல் சமீபத்தில் 2005-க்குப் பிறகு மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
மறுபுறம், வளர்ந்து வரும் பணிநீக்க நடவடிக்கைகள் பணி உலகில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. மந்தநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக பல இடங்களில் அவை விவாதங்களாக மாறியுள்ளன.
சரி, யாரெல்லாம் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது?
‘நிறுவனங்கள் பெரும்பாலும் பணிநீக்கம் செய்கையில் நடுத்தர நிர்வாகத்தை குறிவைக்கின்றன. அவற்றை நெறிப்படுத்த முயற்சி செய்கின்றன’ என்று Glassdoor-ன் முன்னணி பொருளாதார நிபுணர் டேனியல் ஜாவோ கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய பணிநீக்கங்கள் தொலைதூர பணியாளர்களின் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வர முயற்சிக்கும் நேரத்தில், தொலைதூர பணியாளர்களை முதலாளிகள் குறிவைப்பார்கள் என்று சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
தொலைதூரத்தில் இருக்கும் ஒரு பணியாளரை நீக்குவது எளிமையான ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.
இதிலிருந்து தப்பிக்க உங்களை நீங்கள் எப்படி தயார் செய்ய வேண்டும்?
கொலம்பியா பிசினஸ் ஸ்கூல் நிர்வாகத்தின் இணைப் பேராசிரியரான டேனியல் கியூமின் ஆலோசனை, தற்போதைய சூழ்நிலையில் தங்கள் பதவிகளைப் பற்றி ஆர்வத்துடன் இருக்கும் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ‘ரிமோட் ஒர்க் என்ற சகாப்தம் குறைந்து வருகிறது. உங்கள் அர்ப்பணிப்பை நேரில் காட்டுங்கள்’ என்று கூறுகிறார்.
மோனிக் வால்கோர் என்ற நிர்வாக பயிற்சியாளர் கூறுகையில், பணியாளர்கள் நிர்வாகத்துடன் உறுதியான உறவுகளை உருவாக்கவும், ஏற்கனவே வைத்திருக்கும் கடமைகளை எண்ணி, தங்கள் வழியில் வரக்கூடிய சில மாற்றங்களைத் தழுவவும் பணிபுரிய வேண்டும் என்று கூறுகிறார்.