அமெரிக்காவில் தினமும் இவ்வளவு வாகன விபத்துகள் நடக்குதா..? வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகில் மிக பெரிய ரோட் நெட்வொர்க்கை கொண்ட மிக முக்கியமான நாடுகளில் ஒன்று அமெரிக்கா. ஆனால் இந்த நாட்டில் வாகனம் ஓட்டுவது எவ்வளவு ரிஸ்க்கானது என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று அமெரிக்காவில் வாகனம் ஓட்டுவது மிக ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
சராசரியாக ஒரு அமெரிக்க குடும்பத்திற்கு 1.88 வாகனங்கள் உள்ளன. அமெரிக்காவில் வாகனங்களை வைத்திருப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இங்கு நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது அமெரிக்க வாழ மக்களிடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 16,500 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த கணக்கின்படி பார்த்தால் மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 6 மில்லியன் அதாவது 60 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனிடையே 2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் சுமார் 42,939 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய ஆண்டு அதாவது 2020-ஆம் ஆண்டில் உயிரிழந்த 38,824 பேரை விடவும், 2019-ஆம் ஆண்டில் உயிரிழந்த 36,355 பேரை விடவும் அதிகம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மோசமான டிரைவிங்…
அமெரிக்காவில் கார்களை விற்று வரும் நிறுவனங்கள் நிச்சயமாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களையே விற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் இந்த அளவிற்கு சாலை விபத்துகள் நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் ஃபாஸ்ட் லேனில் வாகனத்தை மெதுவாக இயக்குவது, ஸ்லோ லேன்களில் வாகனத்தை அதிவேகமாக இயக்குவது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை ஆர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்டவை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
இதனிடையே பெரிய சைஸ் வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதால், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வேறு ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது. இந்த ஆய்வு முடிவை உண்மை என்று கூறும் நிபுணர்கள் உண்மையில் ஒப்பீட்டளவில் பெரிய எஸ்யூவி-க்கள் மற்றும் பிக்-அப் டிரக்ஸ்கள் போன்றவை சிறிய வாகனங்களை விட சக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மிகவும் ஆபத்தானவை என குறிப்பிடுகின்றனர்.
வாகன உற்பத்தியாளர்கள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் தங்கள் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ADAS அம்சத்துடன் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்ய ரேடார்கள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது . மேலும் மல்ட்டி ஏர்பேக்ஸ் மற்றும் EBD உடன் ABS போன்ற பல பாதுகாப்பு சிறப்பம்சங்கள் இப்போது ஸ்டாண்டர்டாக வருகின்றன. இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் சாலைகளில் செல்லும் போது வாகனங்களை இயக்குவோர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை வெளியாகி இருக்கும் விபத்துகளை பற்றிய எண்ணிக்கை மூலம் தெரிகிறது.
அதே போல துப்பாக்கி வன்முறை சம்பவங்களின் போது ஏற்படும் சாலை விபத்துக்களில் ஏறக்குறைய பலர் இறப்பது, இந்த இறப்புகளில் பெரும்பாலானவை தவிர்க்கப்பட கூடியவை என்பதை தெளிவாக காட்டுகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மற்றும் தண்டனை, டிரைவிங் லைசன்ஸ் கொடுக்கும் முன் கடுமையான ஸ்கிரீனிங் ப்ராசஸ் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றினால் சாலை விபத்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் பலன் கிடைக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.