அதிமுக பொதுக்குழு எழுச்சி! கட்டுக்கடங்காத கூட்டம்! பவுன்சரை அடிக்கப் பாய்ந்த முன்னாள் அமைச்சர்!
அதிமுக பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர் ஒருவரை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கழுத்தை பிடித்து இழுத்து அடிக்கப் பாய்ந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதை விட்டு விட்டு என்ன வேடிக்கை என்பதை போல் தனது மொத்த கோபத்தையும் அந்த பவுன்சர் மேல் கொட்டித்தீர்த்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின். எல்லோர் முன்னிலையிலும் தன்னை பெஞ்சமின் அடிக்கப் பாய்ந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர் முகம் வாடிப் போனது.
சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகமெங்கும் இருந்தும் திரளான தொண்டர்கள் வருகை தந்தனர். பொதுக்குழு நடைபெறும் அரங்கத்திற்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றாலும், தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் அலைகடலென திரண்டுவிட்டார்கள்.
சுடச்சுட இட்லி, பொங்கல், மசால் வடை! 5,000 பேருக்கு காலை, மதியம் சாப்பாடு! அதிமுக பொதுக்குழு ருசிகரம்
இதனால் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. அனைவரையும் உள்ளே விட்டால் சிக்கல் ஏற்படும் என்பதால் பொதுக்குழு அரங்கத்தின் நுழைவு வாயிலிலேயே வடிகட்டும் படலம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கேட் இழுத்து மூடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் உள்ளே போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் பொதுக்குழுவை ஒருங்கிணைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கேட் அருகே வந்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி வருகை தரும் நேரம் என்பதால் அவர் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்தவர், திடீரென பவுன்சரை அடிக்கப் பாய்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.