நீதியே முதன்மை’ என்ற கொள்கையில் புதிய நீதித்துறை நெறிமுறைகளை நாடு பெற்றுள்ளது – ஜனாதிபதி திரெளபதி முர்மு பெருமிதம்..!
புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசியதாவது., பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள், ஏழை மக்களே இந்த நாட்டின் தூண்கள். இந்தியாவில் இந்த 4 தூண்களை வலுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. உலக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதமாக உள்ளது. இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. ரெயில்வே துறையை முழுக்க முழுக்க மின் மயமாக்கும் பணி விரைவில் நிறைவுபெற உள்ளது. 100க்கும் அதிகமான வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. இந்தியாவின் சாலை போக்குவரத்து மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கி.மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பயனாளியையும் விட்டுவிடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே எனது அரசின் இலக்கு. ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. உலக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதமாக உள்ளது. எளிமையாக தொழில் தொடங்கும் தளமாக இந்தியா மாறி வருகிறது. ஏழை பெண்களுக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன் பெறும் நடைமுறை எளிதாகி உள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியாவை நோக்கி உலகமே ஈர்க்கப்படுகிறது. மேக் இன் இந்தியா என்பதே உலகளவில் பிராண்டாக மாறிவிட்டது.