பிரதமர் மோடி பயன்படுத்தும் ரேஞ்ச் ரோவர் காரில் இவ்வளவு வசதிகள் இருக்கா..?

ஜனவரி 26-ம் தேதி இந்தியா தனது 75-வது குடியரசு தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடியது. தேசிய போர் நினைவுச்சின்னத்திலிருந்து கண்ணைக் கவரும் அணிவகுப்புடன் விழா தொடங்க, பல பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரூ.10 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் செண்டினல் (Range Rover Sentinel) காரில் வந்திறங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய பிரதமருக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த SUV காரை இங்கிலாந்தைச் சேர்ந்த Special Vehicle Operations (SVO) பிரிவினர் வடிவமைத்துள்ளனர்.

கிங் சைஸ் அளவு கொண்ட இந்த SUV காரை தான் கடந்த சில வருடங்களாகவே பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். அலுவல் ரீதியான பயணம், தேர்தல் பரப்புரை, பேரணி போன்ற அனைத்திற்குமே இந்த வாகனத்தில் பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தில் வேறு எந்த வாகனத்திலும் இல்லாத பல அரிதான வசதிகளும் சிறப்பம்சங்களும் உள்ளதால் மற்ற வாகனங்களை விட இது தனித்து தெரிகிறது.

<strong>இந்தக் காரில் அப்படியென்ன விசேஷம்?</strong> மிகப்பெரிய ரேஞ்ச் ரோவர் செண்டினல் SUV கார் முழுதும் அதிக திறன் வாய்ந்த குண்டு துளைக்காத கண்ணாடிகள் உள்ளது. இதனால் காருக்குள் அமர்ந்து பயணிவர்களுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுவதில்லை. எவ்வளவு அதிகமான துப்பாக்கி குண்டுகளையும், வெடி மருந்துகளையும், ரசாயன தாக்குதல்களையும் தாங்கும் அளவிற்கு இந்த கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் உள்ள பாதுகாப்பு வசதிகளை சொல்லிக் கோண்டே போகலாம். ஒருவேளை திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் கூட இந்தக் காருக்குள் இருப்பவர்களுக்கு சிறு கீறல் கூட ஏற்படாது. அந்தளவிற்கு இதன் பாதுகாப்பு வசதிகள் உள்ளது.

<strong>சிறப்பம்சங்கள் :</strong> இந்தக் காரில் உள்ள உச்சபட்ச பாதுகாப்பு வசதிகள் என்று எடுத்துக்கொண்டால், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முன்புற ஜன்னல் கதவு. முக்கியமான ஆவணங்களை கொடுப்பதற்கோ பரிமாறுவதற்கோ வசதியாக இதனை வெறும் 150மிமீ மட்டுமே திறக்க முடியும். அப்போதும் கூட காரின் உள்ளே இருப்பவரை வெளியிலிருந்து பார்க்க முடியாது. எமர்ஜென்சி அல்லது தாக்குதல் நடக்கும் சமயத்தில், இந்தக் கார் பஞ்சர் ஆனாலும் கூட எந்தவித தடங்கலும் இல்லாமல் சராசரியாக 80கி.மீ வேகத்தில் 50கி.மீ தூரம் வரை செல்லும் வசதியைக் கொண்டுள்ளது.

<strong>இஞ்சின் பவர் :</strong> இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட ரேஞ்ச் ரோவர் செண்டினல் SUV கார், 5.0 லிட்டர் V8 சூப்பர் சார்ஜ் பெட்ரோல் இஞ்சினில் இயங்குகிறது. இந்த இஞ்சின் அதிகபட்சமாக 374 bhp பவரைக் கொண்டுள்ளது. ஜீரோவிலிருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 10.4 நொடிகளில் அடையக்கூடிய திறனைப் பெற்றுள்ள இந்த செண்டினல் கார், அதிகபட்சமாக 193கி.மீ வேகம் வரை செல்லும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *