எதற்கெடுத்தாலும் கூச்சப்படும் நபரா..? தயக்கத்தில் இருந்து வெளிவர சில டிப்ஸ் இதோ..
எல்லாரும் ஒன்றாக கூடி பேசிக் கொண்டிருக்கையில் நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் உங்களுடைய கூச்ச சுபாவம்தான். இந்த குணம் தான் மற்றவரிடம் இருந்து உங்களை பிரிக்கிறது.
கூச்சம் என்பது நீங்கள் எந்த சூழ்நிலைகளையும், சந்திக்கவும் பேசவும் தடுக்கிறது. இதனால் உங்கள் ஆளுமை வளர்ச்சி முற்றிலும் பாதிப்படைகிறது. எனவே உங்களின் இந்த கூச்சத்தை போக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
கூச்ச சுபாவமுடைய நபர் சந்திக்கும் பிரச்சினைகள்: கூச்சம் சுபாவம் உங்களை மற்றவர்களிடமிருந்து விளக்குகிறது மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுக்கிறது. இந்த குணம் கொண்ட நபர் பிறரிடம் பழகும்போது பாதுகாப்பற்ற உணர்வை சிந்திக்கிறார்கள். இதன் காரணமாக, தலைச்சுற்றல், வியர்வை, வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள்.
கூச்சம் சுபாவம் அந்த நபரின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கிறது. உதாரணமாக, வேலை செய்யும் இடம், தனிப்பட்ட வாழ்க்கை. மேலும் இது சுயமரியாதை அல்லது தன்னம்பிக்கையை பெரிதும் பாதிக்கும். இந்த குணம் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களை உருவாக்குவதில் சிக்கல்.
கூச்ச சுபாவத்தை எப்படி சமாளிப்பது?
ஒன்று..
உங்களின் இந்த சுபாவத்தில் இருந்து வெளியேற, உங்களுக்கென சிறிய இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அல்லது சகா ஊழியர்களிடம் தொடர்ந்து பேசுங்கள். இந்த விஷயங்கள் உங்களின் நம்பிக்கையை வளர்க்கவும், அமைதிப்படுத்தவும் உதவும்.
இரண்டு..
கூச்சம் உங்கள் திறமை மற்றும் வெற்றியை அங்கீகரிக்கும் சமயத்தில் வந்தால், நீங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை இழக்க நேரிடும். உங்கள் பலம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை வெளியே கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
மூன்று…
எல்லோரும் உங்களைப் பார்க்கிறார்கள் என்று நினைப்பதை நிறுத்துங்கள். மேலும் பிறர் உங்களின் ஒவ்வொரு விஷயங்களையும் கவனிக்கவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அதுதான் உண்மை. எனவே நீங்கள் விரும்பியபடி இருங்கள்.
நான்கு…
உங்களுக்கு தெரியுமா.. நமக்கு எதிரி நாம்தான். நம்மை நாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறோம். எனவே இனி அப்படி இருக்காமல் பிறருடன் பழகுங்கள். இது உங்களுக்குள் இருக்கும் பயம் மற்றும் கூச்சத்தை நீக்க உதவும்.
ஐந்து…
கூச்சத்தைப் போக்க முதலில் தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த விதமான தோல்வியும் பயணத்தின் முடிவு அல்ல. அவமானத்தை வெல்வது என்றால் தோல்வியை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள். தோல்வியை வரவேற்கத் தொடங்கினால் வெற்றி உங்களைத் தேடி வரும்.
இந்த 5 விஷயங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம், உங்கள் கூச்சத்தை போக்கலாம். இந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்.