நாடாளுமன்றத்தின் 7ஆவது புதிய சார்ஜென்ட் நியமனம்
இலங்கை நாடாளுமன்றத்தின் 7ஆவது புதிய சார்ஜென்டாக குசான் சம்பத் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
ஆறாவவது சார்ஜென்டாக கடமையாற்றிய நரேந்திர பெர்னாண்டோ நேற்று (31.01.2024) ஓய்வு பெற்றதையடுத்து, 7ஆவது சார்ஜென்டாக தனது கடமைகளைப் ஜயரத்ன பொறுப்பேற்றுள்ளார்.
இதன்படி ஓய்வுபெற்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ, புதிய சார்ஜென்டாக பதவியேற்றுள்ள குசான் சம்பத் ஜயரத்னவிடம் செங்கோலையும் வாளையும் கையளித்துள்ளார்.
துரித தாக்குதல்
குசான் சம்பத் ஜயரத்ன 1994 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையில் கடமையாற்றியுள்ளார். குறிப்பாக, கடமையின் போது நீண்ட காலமாக துரித தாக்குதல் அணியில் (Fast Attack Craft Flotilla) இ;டம்பெற்றிருந்தார்.
பின்னர் 2007 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்தில் உதவி சார்ஜென்டாக சேவையில் இணைந்து கொண்ட அவர், 2018 ஆம் ஆண்டு பிரதி சார்ஜென்டாக பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
அதன்படி, ஜயரத்ன 2024 ஜனவரி 30 வரை டெப்யுட்டி சார்ஜென்ட்-அட்-அர்ம்ஸ் என்ற பதவியில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.