உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் வாழைத்தண்டு பொரியல்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். அழகு என்றால் பளபளப்பான சருமத்தில் மட்டும் இல்லை.
உடலை சீராகவும் அழகான உடலமைப்புடனும் வைத்திருக்கவும் வேண்டும். அதுவே அழகான உடலாக பொருள்படுகிறது எனலாம்.
அந்தவகையில் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ள வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மையையும் உடல் எடையை குறைக்கும் தன்மையும் வைத்திருக்கிறது.
எனவே வாழைத்தண்டை வைத்து எவ்வாறு பொரியல் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 400 கிராம்
பாசி பருப்பு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 2 பல்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெள்ளை உளுந்து – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர்
செய்முறை
முதலில் பாசி பருப்பை தண்ணீரில் வேக வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெள்ளை உளுந்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதில் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வாழைத்தண்டு சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4 நிமிடங்களுக்கு கிளறவும்.
பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
வாழைத்தண்டு வெந்தவுடன் பாசிப்பருப்பை சேர்க்கவும்.
இறுதியாக துருவிய தேங்காய், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.