இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவும் 5 காய்கறிகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், நாம் உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும்.
சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், அது இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
சமீப காலமாக மாரடைப்பால் தினந்தோறும் பலர் இறக்கிறார்கள். இதற்கு உணவுகளும் முக்கிய காரணமாக உள்ளன.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் 5 காய்கறிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் இதயத்தில் அடைப்பு அல்லது வேறு எந்தப் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக மருத்துவரின் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பச்சை இலை காய்கறிகள்
வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த கீரை, காலே, ஸ்விஸ் சார்டு போன்ற பச்சை இலை காய்கறிகள் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது.
ப்ரக்கோலி
ப்ரக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட், வைட்டமின், நார்ச்சத்து ஆகியவை நிறம்பியுள்ளது. மேலும், இதிலுள்ள சல்ஃபோரபீன் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.
தக்காளி
இதயத்திற்கு நன்மை செய்யும் லைகோபீன் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் தக்காளியில் அதிகமுள்ளது. இவை இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வரும் ஆபத்தை குறைக்கிறது.
அவகேடோ
ஊட்டச்சத்து நிறைந்துள்ள அவகேடோவில் இதயத்திற்கு நன்மை செய்யும் நிறைவுற்ற கொழுப்புகள் நிரம்பியுள்ளது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.
குடை மிளகாய்
குடை மிளகாயில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமுள்ளது. இது இதயத்தில் ஏற்படும் குறைபாட்டை குறைத்து, இதய நலனையும் மேம்படுத்துகிறது.