முடி கருகருனு வளர இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்க
முடி உதிர்தல் இயற்கையாகவே நிகழ்வதாகும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலுக்கு நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்திருப்போம். ஆனால் அது எதுவும் சிறப்பான பலனை தருவதில்லை.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்காது. தேவையான மூலிகைகள் மற்றும் இயற்கை வைத்தியங்களையும் பயன்படுத்திக்கொள்வதும் நல்லது.
எனவே அவ்வாறு உதவும் பொருட்கள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.
நெல்லி
நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊக்கமளிக்கும் ஒரு மூலிகையாகும். இது கூந்தலின் வேர்கலைகளை வலுப்படுத்த உதவுகிறது, முடி வளர்ச்சியை ஊக்கவிக்கிறது. எனவே நெல்லியை எண்ணெய் வைத்து பயன்படுத்தவும்.
பிருங்கராஜ்
பிருங்கராஜ் ஆயில் முடி உதிர்வு பிரச்சினைக்கு நிவாரணம் அளித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. இது பயன்படுத்துவதால் ரத்த ஓட்டத்தை மேம்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் விரைவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெந்தயம்
வெந்தயத்தில் ப்ரோட்டீன்ஸ் மற்றும் நிகோடினிக் ஆசிட் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. இது கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை பேஸ்டாக அரைத்து முடியில் தடவலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவுவதால், தலை குளிர்ச்சி அடைவதோடு ஆரோக்கியமாகவும் வளரும்.
செம்பருத்தி பூக்கள்
இந்த பூவின் இலை முதல் இதழ் வரையில் அனைத்திலும் அதிக மருத்துவ குணங்கள் இருகின்றன. இவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே ஹேர் மாஸ்க்ஸ், ஆயில் போன்ற விதத்தில் இதை பயன்படுத்தலாம்.
வேப்பிலை
வேப்பிலையில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிய தூண்டும். வேப்ப எண்ணெயை கூந்தல் பராமரிப்பு பொருட்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.