வீட்டிற்கு இந்த பறவை வந்து இருக்கா? அப்போ இனி வீட்டில் பணமழை தான்
எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிர்.
கொட்டும் குணம் தேளுடையது போல ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு.
இந்த வகையில் எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் வரும்? எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வந்தால் துரதிர்ஷ்டம் வரும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால் நல்லது நடக்கும். அதாவது வீட்டில் சுப காரியங்கள் நிகழும். மேலும் குறையாத செல்வத்தை அள்ளி தரபோவதாக நம்பப்படுகின்றது.
புறா
புறா வீட்டிற்கு வந்தால் வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
ஆந்தை
ஆந்தை வீட்டிற்கு வந்தால் அது நல்லது இல்லை என்று தான் நினைப்பார்கள். ஆந்தையானது வடமாநிலத்தில் மகாலட்சுமியின் வாகனமாக இருகின்றது. ஆகவே ஆந்தையானது வீட்டிற்கு வருவது நல்லது.
மயில்
மயில் வீட்டிற்கு வருவது நல்லது என்று தான் கூறுவார்கள். மழை வர முன் தனது நடனத்தால் அறிகுறியை காட்டும். அதாவது மயில் நம்முடைய வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே தடுக்க உதவுகின்றது.
கழுகு
கழுகு வீட்டிற்கு வருவது ஒரு எளிதான விடயம் இல்லை. இது மகாவிஷ்னுவின் வாகனமாகும். இது வீட்டிற்கு வந்தால் அதிஷ்டம் என்று தான் பல வேதங்கள் கூறுகின்றது எனலாம்.